அனைத்து ரயில் பயணிகளுக்கும் அரசாங்கம் சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்கள், பரீட்சை அதிகாரிகளை தவிர ஏனையவர்களுக்காக ரயில் நிறுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவினால் விசேட அறிவிப்பு இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, தெமட்டகொட, மருதானை, கட்டுகுருந்த மற்றும் பெந்தோட்டை வரையிலான ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை எழுதும் மாணவர்களுக்காகவும், பரீட்சை அதிகாரிகளுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரயில் மற்றும் விசேட ரயில்களை தவிர்த்து ஏனைய ரயில்கள் எந்தவொரு ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.