கொழும்பு தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்..!!

நாட்டில் கொரோனா சூழ்நிலையை அடுத்து மேலும் ஐந்து இடங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு தெமட்டகொட மற்றும் மருதான ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயகல,பேருவளை, மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு திர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஐந்துமணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.