இலங்கையில் 609 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம்..!!

திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியிலிருந்து புதிதாக 609 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் இருந்தும், 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 05 பேர் காலி மீனவ துறைமுகத்தில் இருந்தும், 20 பேர் பேருவளை மீனவதுறைமுகத்தில் இருந்தும் 40 பேர் கொரோனா தொற்றாளிகளின் நெருங்கிய இணைப்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில் குணமாகிய 83 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.இவ்வாறான நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.