முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுக்கு திடீர் மாரடைப்பு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவருமானவர் கபில் தேவ். 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.