நவராத்திரி ஏழாம் நாள் காளராத்திரி தேவியின் அருளைப் பெற பூஜை செய்வது எப்படி?

நவராத்திரி என்பது துர்கா தேவியைப் போற்றும் விதமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் போற்றி வணங்கப்படுகிறது. அந்த வகையில் ஏழாவது நாளாக துர்கையின் காளராத்திரி வடிவம் வழிபடப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமான ரூபம் காளராத்திரி. இதில் காள என்றால் நேரம், மரணம் மற்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும்.துர்கை அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். இப்போது நவராத்திரியின் ஏழாவது நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியை வழிபடும் நேரம், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் என்னவென்று காண்போம்.
காளராத்திரி தேவியின் வடிவம்


காளராத்திரி தேவி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆக்ரோஷமான ரூபத்தில் இருப்பவர். மேலும் இவரது தேகம் கருமை நிறத்தில் இருக்கும். இவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, நான்கு கரங்களைக் கொண்டிருப்பார். இவரது ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மற்றொரு கரத்தில் வாளும் இருக்கும். எஞ்சிய இரண்டு கரங்கள் பக்தர்களுக்கு அபயத்தை வழங்கும். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர்.
பூஜை முறைகள்
* அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.
* பூஜை அறையில் காளராத்திரி தேவியை வைக்கவும்.
* தேவியை பூக்களால் அலங்கரித்து, ஊதுபத்தியை ஏற்ற வேண்டும்.
* பின் ஒரு கலசத்தை எடுத்து, அதை அரிசியால் நிரப்பி, சுற்றி மாவிலைகளை வைத்து, மேலே தேங்காயை வைக்க வேண்டும்.
* அடுத்து விளக்கை ஏற்றி, தேவிக்கான மந்திரத்தைக் கூறி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
காளராத்திரி தேவிக்கான மந்திரம்
“வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி”
காளராத்திரி தேவிக்கான பிரசாதம

நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியைப் பிரியப்படுத்த, அவருக்கு விருப்பமான வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்த பலகாரங்களைப் படையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவி காளராத்திரி உங்களின் வறுமையை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவார்.