14 லட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் மன்னாரில் சிக்கிய இருவர்!!

மன்னாரில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலை மன்னார் கிராமம், சிலுவை நகரைச் சேர்ந்த 21 மற்றும் 49 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களையே குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தலை மன்னார் கிராம பகுதியில் வைத்தே இந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று (வியாழக்கிழமை) மாலை மீட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஐயதிலக ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உப.பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.மேலும், மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.