மனைவி செலுத்திய காரில் மோதிப் பலியான கோடிஸ்வர கணவன்!! திட்டமிட்டு நடந்த கொலை??

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி செலுத்திய அதிசொகுசு காரில் மோதி அவரின் கணவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் பொல்கஸ்ஓவிடவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


நேற்று முன்தினம் அதிகாலை குறித்த பெண்ணினால் செலுத்தப்பட்ட காரின் முன்னால் அவரின் கணவர் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொல்கஸ்ஓவிட வெலேகும்புர வீதி பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் காரினை செலுத்திய அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட பெண் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.