மாயமான கொரோனா தொற்றாளர் சற்றுமுன் கண்டுபிடிப்பு!

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான இளைஞர் ஒருவரோ இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், மாயமாகியுள்ள குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.