யாழில் கொவிட்- 19 விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு

யாழ்.நகரில் கொவிட்- 19 விழிப்புணர்வு செயற்பாடு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனயினரால் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால், யாழ்ப்பாண நகர் பகுதியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.


குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின்போது, யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் முக கவசம் அணியாது வருகை தந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.அத்தோடு யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அனைத்து கடைகளிற்கும் சென்று சுகாதார நடைமுறை மற்றும் பொருட்கள் விற்பனை தொடர்பான சோதனை நடாத்தினர், அத்தோடு கொரோனா ஏற்படாவண்ணம் எவ்வாறு நம்மைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.