நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. யாரும் எதிர்பாராத விதமாக 8 எதிரணி உறுப்பினர்கள் திருத்தத்தை ஆதரித்தனர்.இதில் 4 பேர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள்.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் 5 ஆசனங்களை வென்றது. அதில், ரவூப் ஹக்கீம் தவிர்ந்த ஏனைய 4 உறுப்பினர்களும் 20வது திருத்தத்தை ஆதரித்தனர்.

20வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து 8 எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 20வது திருத்தத்தின் 2ஆம் வாசிப்பில் 156 வாக்குகளை அரசு பெற்றது.20வது திருத்தத்தை,ஐக்கிய மக்கள் சக்தியில் டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நசீர் அஹமட், பைசல் காசிம், எம்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் தேசிய முன்னணியின் AASM ரஹீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏ.அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இசக் ரஹ்மான் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.