கொரோனா தொற்றால் இலங்கையில் நிகழ்ந்த 14வது மரணம்.!!

கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிப் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த பெண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.