ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் பரிதாபமாக மரணம்!!

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது.உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபர் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் சோதனைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் ரகசியத்தன்மையை சுட்டிக்காட்டி பிரேசிலிய சுகாதார ஆணையாளர் மேலும் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் இது தொடர்பான விசாரணையில் இருந்து தரவைப் பெற்றதாகக் கூறினார்.இதற்கிடையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரேசிலில் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்யப்பட்ட நபரின் மரணம் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை குறித்து எந்த கவலையும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,300,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,155,459 பேர் உயிரிழந்துள்ளார்கள்.அதன்படி, பிரேசில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் மெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்திலுள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின்ல் மூன்றாவது இடத்திலுள்ளது.இங்கிலாந்தில் ஒரு நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் பரிசோதனைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தடுப்பூசி குறித்த மறுஆய்வு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.