சுங்கத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளுக்கும் கொரோனா!!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் இரண்டு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த இரண்டு உத்தியோகத்தர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், சுங்கத் திணைக்களம் மூடப்படவில்லை என்ற போதிலும், மிகவும் அத்தியாவசியமான சேவைகள் மட்டுமே நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உணவு, மருந்துப் பொருட்கள், கைத்தொழிற்சாலைகளுக்கு தேவையாள மூலப் பொருட்கள் உள்ளிட்டன மட்டுமே நாளைய தினம் முதல் சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.ஆடை உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விடுவித்துக்கொள்வதற்காக பொதுமக்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.