இலங்கையில் தீவிரமடையும் கொரோனா…மூடப்படும் 49 வங்கிக் கிளைகள்..!!

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக இலங்கை வங்கிக்கு சொந்தமான 49 வங்கிக் கிளைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை வங்கியின் 49 கிளைகளில் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது.வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளுமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.கீழ் காணும் வங்கிக் கிளைகளை இலங்கை வங்கி மூடவுள்ளது. இலங்கை வங்கி இலங்கை அரச வர்த்தக வங்கியாகும்.