ஒரே போத்தல் தண்ணீரைப் பருகியவர்களிற்கு எதிராக இலங்கை நீதிமன்றம் சட்ட நடவடிக்கை!!

பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேலியகொட மீன் சந்தையை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையயத்தை சேர்ந்த 4 பேரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், மேல் மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன், பாணந்துறை நீதிமன்றத்தில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மீறல் நடந்ததாக பொலிஸ் உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்பு படை வீரர் மீது நீதிபதி சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், இருவரும் ஒரே போத்தல் தண்ணீரை பகிர்ந்து அருந்தியதையடுத்தே, அவர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படுகிறது.

-Pagetamil