கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்!

5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில் அதனை சுட்டிக்காட்டியே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.