உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் சில பகுதிகள்.!!

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, பாலிந்தநுவர மற்றும் கொகுலந்தர வடக்கு ஆகிய கிராமங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தனிமைப்படுத்தல் அறிவிப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.