இலங்கையில் புதிதாக 109 பேருக்கு கொரோனா..!!

நாட்டில் மேலும் 109 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,920 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் இருந்து 49 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்த 37 நபர்களும், மினுவாங்கொட தொற்று அலையுடன் தொடர்புடையவர்களுடன் நெருங்கிப் பழகிய 23 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அதன்படி, மினுவாங்கொட தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,451 ஆக அதிகரித்துள்ளது.இன்று, ஒரு வெளிநாட்டவர் உட்பட 44 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினர். இதன்படி குமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,501 ஆக அதிகரித்துள்ளது .