நாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…பொது மக்கள் தினம் உட்பட அனைத்துக் கூட்டங்களையும் இரத்துச் செய்வதற்கு தீர்மானம்.!!

பொது மக்கள் தினம் உட்பட அனைத்துக் கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதனையடுத்து, சேவை பெறுனர்களுக்காக புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் கோரிக்கையை முன்வைக்கும் போது அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்வதன் ஊடாக தொலைபேசி இலக்கத்திற்கு விஷேட இலக்கம் ஒன்றை குறுஞ் செய்தி ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PSC <இடைவௌி>, விஷேட இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு 0704364462 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பவதன் ஊடாக கோரிக்கை தொடர்பான தற்போதைய நிலமையை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.அல்லது www.psc.gov.lk என்ற இணையதளத்தில் விஷேட இலக்கத்தை பதிவு செய்து தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு இல்லாவிடின் 011 -2136600 (பொது), 011 – 2136603 (மேலதிக செயலாளர்), 011 – 2136617 (செயலாளர்) என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.விஷேட அழைப்பு இருந்தால் மட்டும் அலுவலகங்களுக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.