பேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளமையினால், அவர்கள் சென்று வந்த இடங்களில் ஒன்றாக பேலியகொட மீன் சந்தை உள்ளது.இதனையடுத்து, தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று முன்தினம் அங்குள்ள பலர் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் 100 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.