இலங்கையில் மிக வேகமாகப் பரவும் கொரோனா.!! 4 இலட்சத்தைக் கடந்த பி.சி.ஆர். பரிசோதனைகள்..!!

கடந்த இரு நாட்களில் மாத்திரம் கம்பஹா, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் பழகிய மேலும் 150இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும், மட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கும் கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 8 ஆயிரத்து 270 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 6 ஆயிரத்து 466 ஆக உள்ளது.நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 5811 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.