குளியாப்பிட்டி பிரதேசம் முழுவதும் கொரோனா நோயாளிகள்!! சுகாதார வைத்திய அதிகாரி வெளியிட்ட தகவல்..!

குளியாப்பிட்டி பிரதேசம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அந்தப் பகுதிக்கான பிரதான சுகாதார வைத்திய அதிகாரி உத்பல குணசேகர தெரிவித்துள்ளார்.

தனது பொறுப்பில் உள்ள பிரதேசத்தில் மேலதிகமாக 14 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.குளியாப்பிட்டியின் பல பிரதேசங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது பிரதேசத்தில் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.