யாழ்.மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு புதிதாக 21 தொற்றாளர்கள்..!!

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ம ருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில்வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொரோணா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் நேற்று இரவு மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய சிகிச்சைகள் மருதங்கேணி வைத்தியசாலையில்வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும், மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 4 மருத்துவர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.அத்தோடு 4 தாதிய உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த மருத்துவக் குழு ஒரு வாரம் தொடர்ச்சியாக கடமையாற்றிய பின்னர், மற்றொரு மருத்துவக் குழுவை மாற்றம் செய்யும் சுழற்சிமுறைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக கோவிட் -19 நோயாளிகளை அவர்களது மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து பராமரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்தது. மாவட்ட ரீதியான கோவிட் -19 சிகிச்சை நிலையங்களை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக அமைக்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.அதனடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு கோவிட் -19 நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோவிட் -19 சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது