நெய்மருக்கு வந்த சோதனை…வீட்டுக்கு வந்த 22 வயது ரசிகருடன் காதலில் விழுந்த தாயார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் நெய்மரின் தாயாருக்கும், நெய்மரின் ரசிகரான 22 வயது இளைஞனிற்கும் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போதைய கால்பந்து விளையாடு உலகில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் பிரேசிலின் நெய்மர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிகணக்கான இரசிகர்கள் உள்ளனர்.இவரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே. நெய்மருக்கு ஏஜென்டாகவும் உள்ளார். தாயார் நடின் கான்கேல்வ்ஸ். 52 வயதாகும் நடின் கான்கேல்வ்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு வாக்னருடன் உள்ள உறவை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் நெய்மரின் தீவிர ரசிகர் டியோகா ரமோஸ் (22) என்பவர் அடிக்கடி நெய்மரை அவரது வீட்டில் வந்து சந்தித்து உள்ளார். அப்போது நெய்மரின் தாயார் நடினுக்கும் இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் நடின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெய்மர் ஏதும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் அந்த படத்திற்கு‘‘மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’’என்று கருத்து தெரிவித்துள்ளார்.