இலங்கை வாழ் சாரதிகளுக்கு போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களால் நீடிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.