தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிஷாட் பதியூதின்..!!

எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேனவில் அமைந்துள்ள கைதிகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்தில் ரிஷாட் பதியூதின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்க மறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.அதனால், அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி ரிஷாட் பதியூதின் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.