கொழும்பு கப்பல்துறையில் பணிபுரியும் மேலும் 11 ஊழியர்களுக்கு கொரோனா.!!

கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் இதற்கு முன்னர் கொரோனா தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டதாகத் தகவல் வெளியானது.இந்த நிலையில், கப்பல்துறை நிறுவனத்தின் பணிபுரியும் 16 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 625 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும், இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.