புறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா..!!

கொழும்பு புறக்கோட்டை நான்காம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக PCR பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டவர்களால் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.குறித்த வர்த்தக நிலையத்தை சேர்ந்த நான்கு பேர் மற்றும் அதன் அருகில் கடமையாற்றிய மேலும் 35 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.வர்த்தக நிலையத்தை சேர்ந்த நான்கு பேருக்கு நேற்று முன்தினம் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.