இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா !!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 40 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். இதில் 19 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 21 பேர் தொற்றாளிகளின் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5625 ஆக உயர்ந்துள்ளதுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2172ஆக உயர்ந்துள்ளது.