ஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் விடுக்கும் விசேட அறிவித்தல்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் நாளைய தினம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் சுமார் 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கொவிட்-19 நோய்த்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.நாளைய தினம் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.