வீட்டிற்குள் இருந்த பீரோவை தூக்கிச் சென்று நூதனக் கொள்ளை!! ஒரே நேரத்தில் 2 வீடுகளில் 111 சவரன் நகைகள் திருட்டு.!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே,பீரோவை உடைத்தால் சத்தம் கேட்டுவிடுமோ என எண்ணி, பிரோவை தூக்கிச் சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மணி வீட்டில் அனைவரும் வராண்டாவில் உறங்கிகொண்டிருந்த போது, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுள்ளனர்.பின்னர், அறைக்குள் இருந்த பீரோவை சாவி போட்டு திறந்து 74 சவரன் தங்க நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு, சென்றுள்ளனர்.அதே போன்று அருகாமையில் உள்ள வீட்டில் பேராசிரியர் ராம்குமார் என்பவரது வீட்டிலும் குடும்பத்தினர் உறங்கி கொண்டிருக்க, சாதிரியமாக புகுந்த கொள்ளையர்கள், பணம் ,நகை இருக்கும் பீரோவை உடைக்க முயற்சித்துள்ளனர்.ஆனால், சத்தம் கேட்டுவிடுமோ என எண்ணி, பின்பக்க கதவு வழியாக பீரோவை தூக்கிச் சென்றுவீட்டின் பின்பகுதியில் உள்ள வயலில் வைத்து உடைத்து, அதில் இருந்த 37 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.காலையில் எழுந்து பார்ந்து அதிர்ச்சியடைந்த இரு குடும்பத்தினரும், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து திட்டக்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையர்கள் பீரோவை தூக்கிச் செல்லும் வரை, அலட்சியமாக உறங்கியதே இந்த திருட்டிற்கு காரணமாக இருந்துள்ளது.