தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி!!

கலேவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.கலேவெல, ரன்வெதியாவ பகுதியில் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்தே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூன்று சிறுவர்களும் இன்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளும், 7 வயதுடைய சிறுவனம் ஒருவனுமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.