தமிழகம், கேரளத்தில் வெளவால்களில் ‘பேட் கொரோனா வைரஸ்” !! ஆய்வுகளில் வெளியான தகவல்..!

தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் இரு வகையான வெளவால்களில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சோ்ந்த ‘பேட் கொரோனா வைரஸ்’ இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, புணே தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் பிரக்யா டி யாதவ் கூறியதாவது:தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம், கா்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, குஜராத், ஒடிஸா, புதுச்சேரி மற்றும் சண்டீகரில் காணப்படும் இரு வகையான வெளவால்களிலிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், வெளவால்களில் இருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம், புதுச்சேரியில் வெளவால்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சோ்ந்த ‘பேட் கொரோனா வைரஸ்’ இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸுக்கும், ‘கொவைட்-19’ பாதிப்புக்கு காரணமான கொரோனா வைரஸுக்கும் தொடா்பில்லை.

மேலும், வெளவால்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள பேட் கொரோனா வைரஸ், மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரமோ அல்லது ஆய்வு முடிவுகளோ இல்லை.பொதுவாகவே வெளவால்களில் பல்வேறு வைரஸ்கள் உள்ளன. இவற்றில் சில வைரஸ்கள் மனிதனுக்கு எதிா்பாராதவிதமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, வெளவால்களிடம் தொடா் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.