ரிஷாட்டிற்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மருத்துவர் உட்பட 07 பேர் இதுவரையில் கைது..!!

சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உதவியதற்காக மருத்துவர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி அதிகாரிகளால் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் மறைந்திருந்த வீட்டில் வசிக்கும் மருத்துவரும் அவரது துணைவியாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.மருத்துவரின் மனைவி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நெருங்கிய நண்பர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், ரிஷாட் பதியுதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர்.இந்நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.