மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட கஞ்சாப் பயிர்ச் செய்கை..பொலிஸாரிடம் வசமாகச் சிக்கிய நபர்.!

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்த்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பளை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க குறித்த பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதன் போது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது ஏற்பட்டுள்ளதுடன், கஞ்சா செடிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.