கொரோனா அச்சம்: கொழும்பில் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்.!!

கொழும்பு- ஆம்பர் வீதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த சில நாட்களாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்தார்.எனவே, அவருடன் நெருங்கி பணிப்புரிந்த ஏனைய 16 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்தவர்கள், நெருங்கியவர்கள் என பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி வைத்தியர்கள், ஏனைய உயர் பதவிகளில் உள்ள பலரும் இலக்காகியுள்ளனர்.இந்நிலையிலேயே, ஆம்பர் வீதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியமையினால். அவருடன் இணைந்து கடமையாற்றிய ஏனைய 16 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.