ஆறு நாட்களாக தலைமறைவாயிருந்த ரிசாத் பதியூதீன் சற்று முன்னர் பொலிஸாரால் கைது.!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவலை எபினேசர் மவத்தையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (19) அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.6 நாட்களாக ரிஷாட்டை தேடி 6 சிஐடி குழுவினர் தேடுதல் நடத்திய நிலையில், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.ரிஷாத் பதியுதீன் தலைமறைவாக இருக்க உதவியவர்களுக்கும் எதிராக 209 வது பிரிவின் கீழ் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.அவர் தற்போது சிஐடி தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படுவதாகவும், இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.