யாழ்ப்பாணத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா.!! புங்குடுதீவு யுவதி பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்தபெண் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சாரதி நடத்துநர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
அதில் கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் பேருந்தின் நடத்துனர் குறித்த பெண்ணிற்கு கொரோணா தொற்று உறுதியானவுடன் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில், அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோணா தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர்.குறித்த நபருக்கு ஏற்கனவே PCR பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது. எனினும், சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.எனினும் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் நாளை மாலை மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும், சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.