மேலுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா!! இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை விடுதிகள்..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளிகள் அறைகளுக்குள் நோயாளிகளை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 34 மற்றும் 36ஆம் இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளைஹோமாகம, கஹதுடுவவில் உள்ள ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தாதி கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.ஒக்டோபர் 03 ம் திகதி மினுவாங்கொடவில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டதால் அவர் தொற்றிற்குள்ளானதாக கருதப்படுகிறது.அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 200 பி.சி.ஆர் சோதனைகள் இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.