தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் அலுவலகம் யாழில் திறந்து வைப்பு!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் தமிழ் சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.இதன்போது அலுவலகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்ததுடன், அலுவலகத்தினை நாடா வெட்டி திறந்து வைத்துள்ளார்.இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.