உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மிருகக்காட்சி சாலைகளையும் மூடிவிடத் தீர்மானம்..!!

அனைத்து மிருகக்காட்சி சாலைகளையும் மூடி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொவிட்-19 நோய்த் தொற்று அபாயம் காரணமாக இவ்வாறு தற்காலிக அடிப்படையில் மிருகக்காட்சி சாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்றைய தினம் முதல் நாட்டின் சகல மிருகக்காட்சி சாலைகளும் மூடப்படும் என துறைசார் அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மிருகக்காட்சி சாலைகளுக்குள் பிரவேசிப்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது.