உலக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி..உலகம் கொரோனாவிலிருந்து விடுதலை பெறும் அறிகுறி..!! மனதை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் பிறந்த குழந்தையின் ஒளிப்படம்..!!

பிறந்து சில நொடிகளேயான குழந்தையை வைத்தியரொருவர் தூக்கிப்பிடித்து காண்பிக்கும் போது, அக் குழந்தை, வைத்தியரின் முகக்கவசத்தை பிடுங்கி இழுக்கும் காட்சியானது, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலக அளவில் இவ்வருடத்தை கொரோனா புரட்டிப்போட்டுள்ள நிலையில், விரைவில் இயல்பு நிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை புதிய வரவு (குழந்தை) உணர்த்துவதாகவே நம்பிக்கை ஏற்படுவதாக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.முகக் கவசமில்லாத வாழ்க்கையே எதிர்கால உலகிற்கு அவசியமென்பதையே இந்த பிஞ்சுக் குழந்தை உணர்த்துகிறது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ள நிலையில், விரைவில் நாம் எல்லோரும் முக கவசத்தை கழற்றப்போகிறோம் என்பதன் அறிகுறியே இது என குறித்த வைத்தியரும் கூறியுள்ளார்.மேலும், 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக வேண்டும் என தனது விருப்பத்தை பலரும் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.