கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்வு.!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.இவர்களில் நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளவர்கள். இருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் இருந்தவர்கள். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.