கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3390 ஆக உயர்வு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3390 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 5,354 பேரில் 1,946 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அத்தோடு 316 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.