பொதுமக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்துப் பிராந்திய அலுவலங்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை திறப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் தேசிய அடையாள அட்டை விநியோகம் உட்பட பொது மக்களுக்கு வழங்கப்படும் ஏனைய சேவைகள் தொடர்பாக கேட்டறிய திணைக்களம் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
0115 226 126 / 0115 226 115 / 0115 226 100 / 0115 226 150 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு பரீட்சை, நேர்முகப் பரீட்சை, கடவுச்சீட்டு போன்றவற்றை பெற்றுக்கொள்ளும் அவசர நடவடிக்கைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பதாரிகள் அறிவிக்கமுடியும்.இவ்வாறான விண்ணப்பங்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.