மினுவாங்கொடவுடன் தொடர்புடைய 100ற்க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி.!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடைய 100 ற்க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கொரோனா கட்டுப்பட்டு மையம் தெரிவித்துள்ளது.இன்று சனிக்கிழமை காலை மினுவாங்கொடவில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1901 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட1901 பேரில் 1041 பேர் மினுவாங்கொடவில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் என்றும் கொரோனா கட்டுப்பட்டு மையம் தெரிவித்துள்ளது.மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதான ஒரு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை அடுத்து, குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் பின்னர் அதிக ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.இந்நிலையில் எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் மற்றும் முதல் தொற்று மூலத்தை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.