யாழில் ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஆரம்பம்.!! சுமந்திரன் திடீர் வருகையால் சலசலப்பு..!!

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பித்துள்ளது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதால், அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10,30மணியளவில் ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீரென வந்திருந்தார்.இதையடுத்து, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இந்த கூட்டத்தில் எதிர்பார்த்ததை போலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை.கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் ஆரம்பமாகின்றது

குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, க.அருந்தவபாலன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்