ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!!

ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய, முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூர் ரோயல் சேலஞ்சர்’ (Royal Challengers Bangalore)அணியின் தலைவரான விராட் கோலி படைத்துள்ளார்.


பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம், அவர் இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை, ஐபிஎல் தொடரில் 185 போட்டிகளிலும், சம்பியன்ஸ் லீக்கில் 15 போட்டிகளிலும், பெங்களூர் அணிக்காக கோலி களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.