கொரோனாவால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக அந்நாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு தொழில், வாழ்வாதாரம் வழிகள் இல்லாமல் போயுள்ளன.அத்துடன் வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் தங்கும் இடங்களுக்கு வாடகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் உணவை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

பல நாடுகள் விமான பயணங்களை நிறுத்தியுள்ளதுடன் உள்ளே வரவும் வெளியேறவும் தடை விதித்துள்ளன.அதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் நிலைமை கட்டுப்படுத்தப்படும் வரை தற்போதுள்ள நாடுகளில் தங்கியிருக்குமாறு இலங்கை அரசு வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அறிவித்துள்ளது.நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் இலங்கை அரசு தெரியப்படுத்தியுள்ளது.