மேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயது மாணவனுடன் ஓடிப்போன 28 வயது ஆசிரியைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

மேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயது மாணவனுடன் தலைமறைவாகி பாலியல் உறவில் ஈடுபட்ட 28 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது.மாத்தறை மாவட்ட நீதிவான் இசுறுநெந்தி குமார இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஒரு பிள்ளையின் தாயான 28 வயதான ஆசிரியை, தன்னிடம் மேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயதான மாணவனுடன் காதல் வசப்பட்டு, இருவரும் வீடுகளை விட்டு ஓடிச் சென்றிருந்தனர்.கொழும்பு, கண்டி, நுவரெலியாவில் விடுதிகளில் தங்கியிருந்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆசிரியை முற்படுத்தப்பட்டார்.இதன்போது, ஆசிரியை கடுமையாக எச்சரித்த நீதிவான், அவருக்கு 100,000 ரூபா சரீரப்பிணை வழங்கினார்.அத்துடன், ஆசிரியை மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 2021 ஜூலை 3ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவும் உத்தரவிட்டார்.